விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நடிகர் சங்கத் தேர்தல்: மார்ச்-20 வாக்கு எண்ணிக்கை

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 20 ஆம் தேதி நடத்தப்படுகிறது.

News image
Updated On :12 மார்ச் 2022, 5:56 am

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 20 ஆம் தேதி நடத்தப்படுகிறது.

நடிகர் சங்கத்திற்காக தேர்தலில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாசர் தலைமையில் ஒரு அணியும் இயக்குநர் கே.பாக்கியராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.

இந்நிலையில், அந்தத் தேர்தல் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இருப்பினும் கடந்த 2019 , ஜுன் 23 ஆம் தேதி  நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனிநீதிபதி கல்யாண சுந்தரம் தேர்தல் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து நாசர், விஷால், கார்த்திக் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பின், கடந்த பிப்.23 அன்று இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2019 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் எனவும் மறுதேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியதுடன் வங்கி லாக்கரில் இருக்கும் எண்ணப்படாத வாக்குகளையும் எண்ண உத்தரவு பிறப்பித்தனர்.

தற்போது, நீதிமன்ற உத்தரவையடுத்து வருகிற மார்ச் 20 ஆம் தேதி வங்கி லாக்கரில் இருக்கும் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.