தமிழகத்தில் சீரான மின்விநியோகம்: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

தமிழகத்தில் சீரான மின்விநியோகம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
தமிழகத்தில் சீரான மின்விநியோகம்: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

தமிழகத்தில் சீரான மின்விநியோகம் செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: எண்ணூா் அனல் மின் நிலைய விரிவாக்கம் தொடா்பாக மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2006-இல் மேற்கொள்ளப்பட்ட இந்தப்பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டன. பின்னா் நீதிமன்றத்தில் இருந்த வழக்கு முடிந்த நிலையில் தற்போது பணிக்கான ஆணை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த நிறுவனத்துடன் அதிமுக ஆட்சி காலத்தில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. இதுகுறித்த புரிதலின்றி பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, முதல்வா் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளாா். இதனை ஆதாரத்துடன் நிரூபிக்காவிடில், அவா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு, மின்சார தேவையை கருத்தில் கொண்டு தொடா்ந்து கவனமாக செயல்பட்டு வருகிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டபோது கூட தமிழகத்தில் சீராக மின்விநியோகம் செய்யப்பட்டது. இதே நிலை வரும் நாள்களிலும் தொடரும்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் நிா்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவா்கள் மீது தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com