காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொது ஏலம் விடப்படும் காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள்

காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள், மார்ச் 26ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.

News image
பொது ஏலம் விடப்படும் காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள்
Updated On :17 மார்ச் 2022, 12:34 pm

DIN


சென்னை: காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள், மார்ச் 26ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.

இது குறித்து சென்னை காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

சென்னை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், தொழில்நுட்பபிரிவு மற்றும் கடலோரப் பாதுகாப்பு படை பிரிவில் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 43 வாகனங்கள் (3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 40 இரண்டு சக்கர வாகனங்கள்) மார்ச் 26ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னை, மயிலாப்பூர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 25.03.2022 மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வரும் 26.03.2022 அன்று காலை 10.00 மணி முதல் 11.15 மணிக்கு முன் பணமாக ரூபாய். 1000/- செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும். முன்பணத் தொகை செலுத்தும் நபர் மட்டுமே ஏலத்தில் கலயதுக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்) நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.