தமிழக பட்ஜெட்; மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு

2021-22 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில், 33,580.22 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய வரிகளில் மாநில அரசுக்கான பங்கு 33,311.14 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் தெரி
தமிழக பட்ஜெட்; மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு
தமிழக பட்ஜெட்; மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு
Published on
Updated on
1 min read


2021-22 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில், 33,580.22 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய வரிகளில் மாநில அரசுக்கான பங்கு 33,311.14 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில்,

மத்திய வரிகளில் தமிழ்நாட்டின் பங்கீடு

33,311.14 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசிற்கு ஏற்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கான நிலுவைத்தொகை வரும் நிதியாண்டில் வழங்கப்படுவதை கருத்தில்கொண்டு 39,758.97 கோடி ரூபாய் உதவி மானியமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஒட்டுமொத்த வருவாய் வரவினங்கள் 2,31,407.28 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் மொத்த வருவாய் செலவினங்கள் 2,84,188.45 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளன. அகவிலைப்படி உயர்வின் காரணத்தால் உயர்ந்துள்ள செலவினங்கள், ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதால் ஏற்பட்ட ஓய்வூதியச் செலவினங்கள் போன்ற காரணிகள் இதில் அடங்கும். வரவு–செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் நடைமுறையிலுள்ள திட்டங்களுக்காக போதிய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

வருவாய் வசூலின் திறனை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். அதன்படி, வருவாய் பற்றாக்குறை 52,781.17 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, நிகர கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மூலதனச் செலவினங்கள் 43,832.54 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 23.28 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில், நிதிப் பற்றாக்குறை 90,113.71 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறையானது சரக்கு மற்றும் சேவை வரியில் இழப்பீட்டுத் தொகைக்குப் பதிலாக கடனாகப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படும் 6,500 கோடி ரூபாயை கருத்திற்கொண்டு, கணக்கிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தக் கடன் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து அல்லாமல் ஒன்றிய அரசால் பராமரிக்கப்படும் இழப்பீட்டு மேல்வரி நிதியத்திலிருந்து  திரும்பச் செலுத்தப்படுவதாகும்.

2022-23 ஆம் ஆண்டில், நிகரக் கடன் 90,116.52 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 31.03.2023 அன்று நிலுவைக் கடன் தொகை 6,53,348.73 கோடி ரூபாயாகவும், கடன் – மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 26.29 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, 15வது மத்திய நிதிக்குழுவினால் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பிற்குள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com