போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

‘அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் வழங்க முடியாது’: பேரவையில் அமைச்சர்

அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
Published on

அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றன. இன்று காலைமுதல் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜு, “குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதித்து இருப்பது பெண்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பணிக்கு செல்வோர் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ராஜகண்ணப்பன், “போக்குவரத்துத் துறை ரூ. 48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால், பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவசம் என அறிவிக்க முடியாது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com