தமிழ்நாட்டில் 50-க்கு கீழ் குறைந்த கரோனா; சென்னையில் 18
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
தமிழகத்தில் நேற்று 52 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை 50க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், இன்று புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,52,490-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதுவரை கரோனாவால் நேரிட்ட மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 535ஆக குறைந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,13,930-ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...