ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

28, 29-ல் அரசு ஊழியர்கள் போராடினால் சம்பளம் இல்லை: தலைமைச்செயலாளர் 

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

News image
வெ.இறையன்பு
Updated On :25 மார்ச் 2022, 4:21 pm

DIN

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் 28, 29 தேதிகளில் நாடு முழுவதும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் உள்ளிட்ட  துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மற்றும் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வந்தவர்கள, வராதவர்கள் பற்றிய தகவல்களை துறைவாரியாக அனுப்பி வைக்கவும் அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தலைமைச்செயலர் வெ.இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.