விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வழக்கு தொடா்பாக சிபிசிஐடி விசாரணையை எஸ்.பி. முத்தரசி இன்று தொடங்கியுள்ளார்.
விருதுநகா் அருகே 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வந்த விருதுநகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா, அந்த வழக்குத் தொடா்பான கோப்புகளை மதுரை சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன், சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளரும், சிறப்பு புலனாய்வு அதிகாரியுமான வினோதினியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
இதையடுத்து, சிபிசிஐடி சிறப்பு அதிகாரி முத்தரசி இந்த வழக்கின் விசாரணையை இன்று தொடங்கியுள்ளார். 60 நாள்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடா்பாக ஹரிஹரன், சுனைத் அஹமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் உள்பட 8 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி, காவல் ஆய்வாளர் சாவித்திரி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றத்திற்குச் சென்று, இந்த வழக்கில் சிறையில் உள்ளவர்களை மூன்று நாள் நீதிமன்றக் நீதிமன்ற காவலில் எடுக்க மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் சிபிசிஐடி மற்றொரு குழு பாதிக்கப்பட்ட இளம்பெண் தங்கியுள்ள காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருமணத்திற்குப் பின்! உதய்பூர் விமான நிலையத்தில் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரும் சரணடைய உத்தரவு!

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

