எரிபொருள் விலை உயர்வு: மக்கள் நீதி மய்யம் நாளை ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை மாலை செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை மாலை செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்து செங்பல்கட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் மக்கள் நீதி மய்யம் சார்பாக நாளை மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையில் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களக்காக மய்யம் என்னும் ஒற்றை குரலோடு மய்யத்தினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...