ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாட்டில் புதிதாக 1,660 பேருக்கு கரோனா தொற்று; 4,100 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,660 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,100 பேர் பலியாகினர்.

News image
கோப்புப்படம்
Updated On :26 மார்ச் 2022, 4:24 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,660 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,100 பேர் பலியாகினர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு வருகின்றது. இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 1,660 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,100 பேர் உயிரிழந்தனர். சில மாநிலங்களின் விடுபட்ட கரோனா இறப்புகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. 

நேற்று ஒரேநாளில் 2,349 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,80,436 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 16,741 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.04 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 0.25 சதவிகிதமாகவும், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.29 சதவிகிதமாகவும் உள்ளது. 
 
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 182.87 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 29,82,451 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 78.63 கோடி கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,58,489 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.