தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மருத்துவரான தாய் - குழந்தை ஒரே அறுவை சிகிச்சையில் காப்பாற்றப்பட்ட அதிசயம்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஒரே சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவராக இருக்கும் தாயும், அவரது கருவிலிருந்த குழந்தையும் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளது.

News image

மருத்துவரான தாய் - குழந்தை ஒரே அறுவை சிகிச்சையில் காப்பாற்றப்பட்ட அதிசயம்

Updated On :26 மார்ச் 2022, 9:16 am


சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஒரே சிறப்பு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவராக இருக்கும் தாயும், அவரது கருவிலிருந்த குழந்தையும் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளது.

27 வயதான பெண் மருத்துவர் கர்ப்பிணியாக இருந்தபோது அவரது இடது சிறுநீரகத்தில் மிகப்பெரிய கட்டி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டி கண்டறியப்பட்ட ஒரு மாதத்தில், கருவின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. ஒரே சிறப்பு அறுவை சிகிச்சை மூலமாக, சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பையும், சிறுநீரக கட்டியை அகற்றும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதற்காக பல துறை மருத்துவர்கள் ஒன்றிணைந்து இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர். முதலில், சிசேரியன் முறையில் மகப்பேறு மருத்துவர்கள் குழந்தையை பிரசவிக்க வைத்தனர். குழந்தை வெளியே எடுக்கப்பட்டதும், உடனடியாக, சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சீறுநீரகத்தில் இருந்த கட்டியை அகற்றும் சிகிச்சையை அளித்தனர்.

தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.