மே 10 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
மே 10 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். மாா்ச் 19-இல் வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். மார்ச் 14 ஆம் தேதியுடன் முதல் அமர்வு நிறைவு பெற்றது. இதையடுத்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கும் என்றும் மார்ச் 30 அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும்  என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார். 

அதன்படி, இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடவுள்ளது.

ஏப்ரல் 6ல் நீர்வளத்துறை, ஏப்ரல் 7ல் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, ஏப்ரல் 8 ஆம் தேதி கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, ஏப்ரல் 11 ஆம் தேதி பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை என துறை வாரியாக கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com