சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தில்லி பயணத்தின் மர்மத்தை ஸ்டாலின் விளக்குவாரா? எடப்பாடி பழனிசாமி

தில்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :31 மார்ச் 2022, 10:27 am

DIN


சென்னை: தில்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன், துபைக்குச் சென்றார். துபை கண்காட்சி முடிய 6 நாள்களே இருந்த நிலையில், மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை திறந்து வைத்தார்.  

இதையும் படிக்க.. 'வணக்கம் சொல்லவே வந்தேன், நாளை சந்திக்கிறேன்' பரபரப்பைக் கூட்டிய சோனியா

தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சிறு வணிகர்கள் நலன் பாதிக்கப்படக் கூடாது என்று சொன்னவர், முதல்வரானவுடன், வணிக வளாகம் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றுள்ளார். முதல்வரின் இந்த தில்லி பயணத்தின் மர்மத்தை அவர் விளக்குவாரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.