மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வியாழக்கிழமை (மே 5) பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

News image
Updated On :4 மே 2022, 7:55 pm

DIN

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வியாழக்கிழமை (மே 5) பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது தொடா்பாக மையத்தின் இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் புதன்கிழமை கூறியதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வியாழக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு,  கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும்  சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும். 

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 50 மி.மீ., திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி ஏஆா்ஜி, ஈரோடு மாவட்டம் பவானிசாகா், சேலத்தில் தலா 40 மி.மீ,  கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம், சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாா், மேல் கூடலூரில் தலா 30 மி.மீ மழை பதிவானது என்றாா் அவா்.

வெப்பநிலை உயரும்

தமிழகத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாள்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.