மேட்டூர் அருகே ஓட்டுநர் கொலை: கள்ளத் தொடர்பு காரணமா?- போலீஸ் விசாரணை
மேட்டூர் அருகே ஓட்டுநர் அவரது வீட்டில் முகம் நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஓட்டுநர் அவரது வீட்டில் முகம் நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் யாரேனும் இவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.
மேட்டூர் அருகே உள்ள பாலவாடியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் பொன். குமார்(32) ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை அவரது வீட்டில் முகம் நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், கொளத்தூர் ஆய்வாளர் சுப்புரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சடலத்தை கைப்பற்றிய கொளத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்துபோன ஓட்டுநர் பொன். குமாருக்கு பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்த காரணத்தால் யாரேனும் இவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகம் நசுங்கிய நிலையில் உள்ளதால் அம்மிக்கல்லால் முகத்தை நசுக்கினார்களா? அல்லது சம்மட்டியால் அடித்து கொலை செய்தார்களா என்பது தெரியவில்லை. சம்பவ இடத்தில் கல்லோ மற்ற ஆயுதம் எதுவும் கிடைக்காததால் போலீசாருக்கு துப்புத் துலக்குவது பெரும் சவாலாக உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கொலையான பொன். குமாரின் கள்ளக்காதலி ஒருவரின் குடும்பத்தாரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...