சென்னையில் 'எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்' பயணத் திட்டம்

எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
சென்னையில் 'எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்' பயணத் திட்டம்
சென்னையில் 'எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்' பயணத் திட்டம்

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இன்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும். ரூ.150 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்தியாவின் முதல் மாநகராட்சியாகவும், தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் கருதப்படும் சென்னையில் மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, வள்ளுவர் கோட்டம், போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்காக, சென்னையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்னும் திட்டம் பொது - தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்துக்கு ரூ.150 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com