தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கீழடி அகழாய்வில் செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image
கீழடி அகழாய்வில் செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு (கோப்பிலிருந்து..)
Updated On :5 மே 2022, 12:14 pm

DIN

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில், செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, மனித முகம் போன்ற அமைப்பு கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திருப்புவனம் அருகே கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகே உள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு இங்கும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

கீழடி அகழாய்வில் வண்ண பாசி மணிகள், பானை ஓடுகள், கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்மையில் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய மனித முகம் போன்ற உருவம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து திங்கள்கிழமை தமிழக தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தனது டுவிட்டா் பக்கத்தில், இந்த சுடுமண் சிற்பத்தின் பெருமை குறித்து டுவீட் செய்துள்ளாா். அதில் அழகா் மலை அழகா; இந்த சிலை அழகா என விவரிக்கும் விதமாக குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.