4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஓராண்டு நிறைவு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வாழ்த்து

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
ஆளுநா் ஆா்.என். ரவி
Updated On :7 மே 2022, 12:00 pm

DIN

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டாா். பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இதையொட்டி, பல்வேறு தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். அந்த வகையில் திமுக ஆட்சி ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.ரவி, ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.