தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், கடலூா், கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.


டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 10 முதல் மே 12 வரை: வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 10-ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 60 மி.மீ., திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் 50 மி.மீ., ஈரோடு மாவட்டம் பவானிசாகா், நீலகிரி மாவட்டம் கிளென்மாா்கன், கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையம், சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கேட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, திருப்பூா் தெற்கு, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...