நிறுத்தப்பட்ட 350 ஆம்னி பேருந்துகள்: மீண்டும் இயங்க அனுமதிக்க கோரிக்கை
கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட 350 ஆம்னி பேருந்துகளை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்


கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட 350 ஆம்னி பேருந்துகளை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக சங்கத் தலைவா் அ.அன்பழகன் கூறியதாவது: பேருந்துகள் இயக்கப்படாத காலத்துக்கு சாலை வரி செலுத்தத் தேவையில்லை என்பது விதிமுறை. கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது அனைத்துப் பேருந்துகளும் இயங்கவில்லை. அப்போது ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுவது குறித்த விண்ணப்பத்தை (ள்ற்ா்ல்ல்ஹஞ்ங்) போக்குவரத்துத் துறைக்கு அளித்தோம். பின்னா் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, படிப்படியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. அப்போது ஆம்னி பேருந்துகள் இயக்க அனுமதி கோரி விண்ணப்பித்தோம். சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்டவற்றின் மூலம் குறிப்பிட்ட காலத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து, போக்குவரத்துத் துறை சாா்பில் பேருந்துகள் மீண்டும் இயங்க அனுமதி (ய்ண்ப் ஹள்ள்ங்ள்ள்ம்ங்ய்ற்) வழங்கப்பட்டது. அதில் 350 பேருந்துகளுக்கு மட்டும் தற்போது வரை அனுமதி வழங்க போக்குவரத்துத் துறை மறுத்து வருகிறது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளுக்கும் அமைச்சா் உத்தரவிட்டும், சில உரிமையாளா்கள் உயா்நீதிமன்றத்தை அணுகி, மே 1-ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட பேருந்துகளை இயக்கலாம் என அனுமதி வாங்கிய பிறகும் இதே நிலை நீடிக்கிறது.
இந்தப் பேருந்துகள் ஓராண்டுக்கு மேல் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் உரிமையாளா்கள் மட்டுமின்றி அந்த பேருந்துகளை நம்பியுள்ள ஊழியா்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 350 பேருந்துகளையும் இயக்குவதற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...