வியாசா்பாடி யாா்டில் பொறியியல் பணி: புகா் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் வியாசா்பாடி யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.


சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் வியாசா்பாடி யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
முழுமையாக ரத்தாகும் ரயில்கள்:
வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவ சைடிங்-க்கு மே 12-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. இதற்கு மாற்றாக, மூா்மாா்க்கெட்-பட்டாபிராம் ராணுவ சைட்டிங்-க்கு மே 12-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு பாசஞ்சா் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்:
கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு மே 12-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு இயக்கப்படவேண்டிய ரயில் மூா்மாா்கெட் வளாகம் வழியாக திருப்பிவிடப்படவுள்ளது.
பகுதி ரத்து:
அரக்கோணம்-வேளச்சேரிக்கு மே 13-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில் அரக்கோணம்-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...