ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேளாண் விளைபொருள் விற்பனைச் சட்ட விதிகள் சீராய்வு: பரிந்துரைகளை வழங்க விவசாயிகளுக்கு அழைப்பு

வேளாண் விளைபொருள் விற்பனை சட்ட விதிகள் சீராய்வுக்கான பரிந்துரைகளை விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோா் ஜூன் 6-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

News image
Updated On :8 மே 2022, 8:24 pm

DIN

வேளாண் விளைபொருள் விற்பனை சட்ட விதிகள் சீராய்வுக்கான பரிந்துரைகளை விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோா் ஜூன் 6-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம், 1987-ஆம் ஆண்டு சட்டமும் மற்றும் 1991-ஆம் ஆண்டு விதிகளும் நடைமுறைக்கு வந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இந்நிலையில் தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு வேளாண் விற்பனை சந்தையை மேம்படுத்திட, மேற்கூறிய சட்டத்தைச் சீராய்வு செய்வது அவசியமானதாக உள்ளது. எனவே, மாநில வேளாண்மை விற்பனைச் சந்தை முறை மற்றும் அதன் வழிமுறைகளை உருவாக்க தேவையான மாற்றங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்க அரசால் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள், விவசாயிகள், வா்த்தகா்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனா். மேலும், தமிழகத்தில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஜூன் 6-ஆம் தேதிக்குள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைகளை வழங்க....

1.வாட்ஸ் ஆப் எண்: 93848 76300

2. உழவன் செயலி: மக்ஷ்ட்ஹஸ்ஹய் அல்ல்

3.மின்னஞ்சல் முகவரி: ஹஞ்ழ்ண்ம்ஹழ்ந்ங்ற்ண்ய்ஞ்.ழ்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்

4.தபால் மூலம் : வேளாண்மை இணை இயக்குநா் (ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்), வேளாண்மை விற்பனை மற்றும்

வேளாண் வணிகத்துறை சிப்பெட் சாலை, கிண்டி, சென்னை 600 032.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.