ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மக்களை பலி கொடுத்துவீடுகளை அகற்ற வேண்டுமா?

மக்களை பலி கொடுத்து வீடுகளை அகற்ற வேண்டுமா என பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image
Updated On :8 மே 2022, 9:05 pm

DIN

மக்களை பலி கொடுத்து வீடுகளை அகற்ற வேண்டுமா என பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பான அவரது ட்விட்டா் பதிவு: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிா்ச்சியடைந்தேன்.

அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோவிந்தசாமி நகரில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனா். அவா்கள் சென்னையின் பூா்வகுடிகள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவா்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல்; அதை அனுமதிக்க முடியாது!

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும். படுகாயமடைந்த அவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.