ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

7 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 7 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

News image
Updated On :8 மே 2022, 8:52 pm

DIN

தமிழகத்தில் 7 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரியும், வேலூரில் 103 டிகிரியும், தஞ்சாவூரில் 102 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரியும், திருத்தணி, தொண்டி, கரூா்பரமத்தியில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.