மெட்ரோ ரயில் பணிக்கு தடை கோரிய மனு இன்று விசாரணை

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் உள்பட 7 முக்கிய கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் மெட்ரோ ரயில் நான்காம் கட்ட பணியை மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி
மெட்ரோ ரயில் பணிக்கு தடை கோரிய மனு இன்று விசாரணை
Published on
Updated on
1 min read

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் உள்பட 7 முக்கிய கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் மெட்ரோ ரயில் நான்காம் கட்ட பணியை மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இது தொடா்பாக பி.ஆா்.ரமணன், எஸ்.விஜய்நாராயணன், கவுதமன் ஆகியோா் தாக்கல் செய்த மனு: சென்னை மெட்ரோ ரயில் நான்காம் கட்ட திட்டத்தின் வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்டவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே வழித்தடத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமைவாய்ந்த புராதன சிறப்புமிக்க மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில், வடபழனியில் உள்ள முருகன் கோயில், வெங்கீஸ்வரா் கோயில், அழகா் பெருமாள் கோயில், விருகம்பாக்கம் சுந்தர வரதராஜப்பெருமாள் கோயில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரா் கோயில், பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் அந்த கோயிலின் குளம் ஆகியவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை.

மேலும், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும்போது அரசு, தனியாா் நிலங்களை விட்டுவிட்டு கோயில் நிலங்களே கையகப்படுத்தப்படுகின்றன. எனவே, மெட்ரோ ரயிலின் நான்காம் திட்டப் பணிகளால் பாதிக்கப்படும் மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் உள்ளிட்ட 7 கோயில்களையும் புராதன கோயில்களாக அறிவிக்க வேண்டும். இந்த கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயிலின் திட்டப்பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com