36 ஆண்டுகளாக ஆண் வேஷத்தில் வாழும் பெண் - காரணம் என்ன?

'மானத்தோட வாழனும் தான் முப்பத்து ஆறு வருஷமா ஆண் வேஷம் போட்டு சாதுர்யமாக வாழ்றேன்' என்கிறார் தூத்துக்குடி மாவட்டம் சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த முத்து மாஸ்டர் என்கிற பேச்சியம்மாள்.
முத்து மாஸ்டர் என்கிற பேச்சியம்மாள்
முத்து மாஸ்டர் என்கிற பேச்சியம்மாள்

'மானத்தோட வாழனும் தான் முப்பத்து ஆறு வருஷமா ஆண் வேஷம் போட்டு சாதுர்யமாக வாழ்றேன்' என்கிறார் தூத்துக்குடி மாவட்டம் சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த முத்து மாஸ்டர் என்கிற பேச்சியம்மாள்.

தூத்துக்குடி மாவட்டம் சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த முத்து மாஸ்டர் என்கிற பேச்சியம்மாள், தற்போது விளாத்திகுளம் தொகுதியில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில்  வசித்து வருகிறார். இவர், தன்னையும் தன் மகளையும் காப்பாற்றிக்கொள்ள கடந்த 36 ஆண்டுகளாக ஆண் வேஷத்தில் வாழ்கிறார். 

'ஒரு பெண்ணாக பிறந்து வளர்ந்தேன். 21 வயதில் திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழந்தேன். அதன் பின்னர் எனக்கு நேரிட்ட அவமானங்கள்,  சமூக   அவலங்கள் என் மனதை மாற்றியது. இளமையில் வறுமையும், உறவினர்கள் ஆதரவு இல்லாத நிலையும் ஏற்பட்டது.

எல்லாவற்றையும் உணர்ந்து சிந்தித்து பார்த்து மானத்தோடும் ஒழுக்கத்தோடும் வாழும் வாழ்க்கைக்கு என்னை முதலில் ஒப்படைத்தேன். 36 வருடங்களுக்கு முன்பு ஆண் வேடமிட்டு கூலி வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி மானமே பெரிது என வாழ்ந்து வருகிறேன்.

கால் வயிற்றுக்கு கஞ்சி குடித்தாலும் நானும் எனது ஒரே மகளும் ஒழுக்க நெறியோடு வாழ்வதற்காக 36 ஆண்டுகளாக இந்த   ஆண் வேடத்தில் வாழ்ந்து வருகிறேன்' என்கிறார் முத்து மாஸ்டர் எனும் அந்தப் பெண். 

'உயிரை விட மானமே பெரியது' என்பது தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்வின் இலக்கணம். அவ்வழியில் வாழ்ந்து பிறந்த ஊருக்கும் குடும்பத்துக்கும் கண்ணியத்தைச் சேர்த்திருக்கிறார் முத்து மாஸ்டர் எனும் இந்த வைராக்கிய பெண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com