திருமணத்திற்குப் பின் பெண்கள், கணவரின் பெயரை சேர்க்க வேண்டுமா? - இந்திய இளைஞர்களின் பதில்!

இந்தியாவில் பெண்கள் பெரும்பாலாக திருமணத்திற்குப் பின்னர் கணவரின் பெயரையோ அல்லது குடும்பத்தின் பெயரையோ தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல  நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 
திருமணத்திற்குப் பின் பெண்கள், கணவரின் பெயரை சேர்க்க வேண்டுமா? - இந்திய இளைஞர்களின் பதில்!

இந்தியாவில் பெண்கள் பெரும்பாலாக திருமணத்திற்குப் பின்னர் கணவரின் பெயரையோ அல்லது குடும்பத்தின் பெயரையோ தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல  நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 

பெரும்பாலான சமூகங்களில் தங்கள் பெற்றோரின் குடும்பப் பெயருக்கு பதிலாக கணவரின் குடும்பப் பெயர்களை மாற்றிக்கொள்கின்றனர். இது திருமணமாகும் பெண்களுக்கு எழுதப்படாத ஒரு விதியாக உள்ளது. 

கணவன் குடும்பப்பெயரை சேர்த்துக்கொள்வதன்/மாற்றிக்கொள்வதன் மூலமாகவே அவள் இந்த சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகிறாள் என்றும் நம்பப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் குடும்பப் பெயர்களை மாற்ற வேண்டும் என்று சட்டம் இல்லை, எனினும் சமூக, சாதி அடிப்படையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. 

பெண்ணியம், பெண்களுக்கு அதிகாரம் என ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் இதுவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஆனால், காலத்திற்கேற்ப இளம் தலைமுறை ஆண்கள் இதனை பெரிதாக விரும்புவதில்லை என்றே தோன்றுகிறது. மேலும், அவர்கள் பெண்களுக்கு சுதந்திரம் அளிக்க விரும்புகிறார்கள். 

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு மூலமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

21 ஆம் நூற்றாண்டில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்களின் மனநிலை என்னவாக இருக்கிறது, மாப்பிள்ளை/பெண் பார்க்கும்படலத்தில் எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது குறித்து  Betterhalf.ai' என்ற புதிய மேட்ரிமோனி நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, 92 சதவிகித இந்திய இளைஞர்கள் திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தனது (பெற்றோரின்) குடும்பப்பெயரை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். 

பெண்கள் தங்கள் பெற்றோரின் குடும்பப் பெயரைத் தொடர்ந்து பயன்படுத்த தங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

எஞ்சிய 8 சதவிகித இளைஞர்கள் மட்டுமே தங்களுக்கு வரும் மனைவிகள், தங்களின்(கணவரின்) குடும்பப்பெயரை ஏற்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். 

வெறும் 8 சதவிகிதம் பேர் மட்டுமே இந்த பண்டைய பாரம்பரியத்தை நம்புவதால், திருமண விவகாரத்தில் ஆணாதிக்க பிடியில் இருந்து இந்தியா முன்னேறியுள்ளது எனலாம். 

'Betterhalf.ai' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பவன் குப்தா கூறுகையில், 'இந்திய பாரம்பரிய திருமணம் மற்றும் பழக்கவழக்கங்களில் பெயர் மாற்றம் என்பது நிலையாதாக இருந்து வருகிறது. திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் தான் பெண்களின் வாழ்க்கையில் முடிவெடுக்கிறார்கள். ஆனால், தற்போது இந்த நிலைமை சற்று மாறியுள்ளது. 21ம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம். 

காலத்திற்கேற்ப இந்த பழமையான பழக்கவழக்கங்கள் நமது சமூகத்திலிருந்தும் நமது சிந்தனையிலிருந்தும் வெளிவர வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் பெண், ஒடுக்கப்படும் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. தற்போது 92 சதவிகிதமாக இருக்கும் இந்த எண்ணிக்கை விரைவில் 100 சதவிகிதம் ஆகும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். 

திருமண வாழ்க்கை என்பது ஆண்/ பெண் இருவருக்கும் மிகவும் முக்கியமானது. ஒருவரையொருவர் சம அளவு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். சில விஷயங்களில் இருவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்க வேண்டும். பழைய பாரம்பரியங்களில் மூட நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com