
சிதம்பரத்தில் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயதப்படை காவலர் பெரியசாமி(26), துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் புதன்கிழமை அதிகாலை தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர், கடந்த மே 6-ஆம் தேதி முதல் இப்பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது தந்தை பெயர் முனுசாமி. சொந்த ஊர் சிதம்பரம் அருகே சேந்தரகிள்ளையில் உள்ள மணிகொல்லை தெருவைச் சேர்ந்தவர்.
சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் எஸ். ரமேஷ்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | திட்டமிட்டபடி குரூப் 2 தோ்வு: தோ்வாணையத் தலைவா் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.