நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

2019-ம் ஆண்டில் காற்று மாசுக்கு 17 லட்சம் பேர் பலி: அன்புமணி ட்வீட்

2019-ஆம் ஆண்டில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வின் புள்ளிவிவரம் அதிர்ச்சி

News image
Updated On :18 மே 2022, 5:54 am

DIN


2019-ஆம் ஆண்டில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வின் புள்ளிவிவரம் அதிர்ச்சியளிக்கும் நிலையில், அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

2019-ஆம் ஆண்டில் அனைத்து வகை மாசுக்களால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சம்; இவர்களில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த புள்ளிவிவரம்  அதிர்ச்சியளிக்கிறது.

உலக அளவில் மாசுக்களால் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 27 சதவிகிதம் இந்தியர்கள் என்பதிலிருந்தே  இந்தியா எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதை உணரலாம். தொழில் வளர்ச்சிக்காக மனித உயிர்களை இழப்பதில் தவறில்லை என்ற எண்ணமே இந்த நிலைக்கு காரணம் ஆகும். இது மிகவும் ஆபத்தானது.

பொருளாதாரம் ஈட்டுவதற்காகத்தான் காற்றையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறோம். ஆனால், மாசுக்களால் 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் மதிப்பு ரூ. 2.73 லட்சம் கோடி (இந்தியாவின் ஜிடிபி 1 சதவிகிதம்) ஆகும். ஆக எதையும் பெறாமலேயே நிறைய இழக்கிறோம்.

காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு பாதிப்பில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. எனவே, மக்களைக் காப்பாற்றுவதற்காக  காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.