மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 112.77 அடியாக இருந்தது.
கடந்த ஒரு வார காலமாக காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 29,072 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 29,964 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் நேற்று வியாழக்கிழமை காலை 11 1.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 112.77 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் 1.67 அடி உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 82.40 டி.எம்.சியாக உள்ளது. பருவ மலைக்கு முன்பாகவே அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தா? - ரயில்வே அமைச்சர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


