ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் தமிழிசை

தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்.
Updated On :22 மே 2022, 3:26 pm

DIN

தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் தமிழகத்தில் 8 தொழிலாளர் நல மருத்துவமனைகள் (ESIC) அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது ஓர் மருத்துவராக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு மருத்துவமனையும் சுமார் 5 ஏக்கரில் 155 கோடியில் அதி நவீன வசதிகளுடன் 100 படுக்கைகளுடன் அமைய உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற   தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களுக்கு அருகாமையிலேயே அதி நவீன வசதிகளுடன்  தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. தொழிற்சாலைகளில் ஏற்படும் எதிர்பாரா விபத்து நேரத்தில் அவசரகால சிகிச்சைக்கு தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

தமிழகத்திற்கு 8 தொழிலாளர்கள் நல மருத்துவமனைகள் (ESIC) அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவிற்கும் எனது வாழ்த்துக்களும்.. நன்றிகளும்..என்று தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.