இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் குசேலன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த நிலையில், இன்று காலை வெளியில் வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில், மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
மேலும், தற்போது அந்த காட்சிகளை வைத்து இரு சக்கர வாகன கொள்ளையர்களை கே.வி.குப்பம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், தற்போது கே.வி. குப்பம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்க திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அவிநாசியில் டேங் ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...