அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தாயார் காலமானார்
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் புதன்கிழமை காலமானார்.


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் புதன்கிழமை காலமானார்.
திருப்பூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்த ஊர் முத்தூராகும். முத்தூர் வேலம்பாளையம் பங்களா தோட்டத்தில் அமைச்சரின் தாயார் தங்கமணி (89) வசித்து வந்தார்.
இதையும் படிக்க.. ஊர் கூடி இழுத்த தேர், பேரறிவாளன் விடுதலை - நடந்தவை என்ன?
அவர் வயது முதிர்வின் காரணமாக இன்று உயிரிழந்தார். அமைச்சர் திருப்பூர், காங்கயத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் உடனடியாக வீடு திரும்ப தாமதமானது.
அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் தாயார் தங்கமணி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறேன். தன்னை இத்தனை ஆண்டுகாலம் போற்றி வளர்த்த, தன் வளர்ச்சியைக் கண்டு உவகையும் பெருமையும் கொண்ட அருமைத் தாயாரை இழந்து நிற்கும் அமைச்சர் சாமிநாதன் அவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். அன்னையின் இழப்பால் மனம் அல்லலுற்றுள்ள சாமிநாதன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...