பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்; தாய் மொழிக்கல்விக்கு ஊக்கம் தாருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை பள்ளிக்கரணையில் டிஏவி குழுமத்தின் புதிய பள்ளிக்கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பேசினார்.
அப்போது, சென்னையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கல்வி சேவை வழங்கி வருகிறது டிஏவி குழுமம். டிஏவி குழுமத்தில் மட்டும் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி பற்றும், தாய்நாடு பற்றும் மிகவும் முக்கியம். போட்டிகள் நிறைந்த உலகத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்வி என்பதே இருளில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு செல்வது தான். கரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கல்லூரி கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
கல்வி மட்டுமே மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து. தமிழக அரசு தொடங்கியுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்; தாய் மொழிக்கல்விக்கு ஊக்கம் தாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் : உதயநிதி பிரசாரம்

பணியிடத்தில் ஆண்ட்டி என்றழைப்பது ஏற்புடையதல்ல: இந்திய செவிலியருக்கு 1.75 லட்சம் நிவாரணம்!

நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!

புதுவையில் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திக்காதது ஏன்?
வீடியோக்கள்

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

