ஆண்ட்டி என அழைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கில் இந்திய செவிலியருக்கு ரூ. 1.75 லட்சம் நிவாரணம் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பிரிட்டன் நீதிமன்றம் உறுதிசெய்தது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 61 வயதான இல்டா எஸ்டீவ்ஸ் பிரிட்டனில் அரசு சுகாதாரத்துறையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருடன் பணிபுரியும் கானாவைப் பூர்வீகமாகக் கொண்ட சக செவிலியர் ஒருவர், இல்டாவின் வயதையும் இனத்தையும் சுட்டிக்காட்டி பல்வேறு தருணங்களில் அவர் மனதைப் புண்படுத்தும்படி ‘ஆண்ட்டி’ என அழைத்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த இரண்டரையாண்டுகளுக்கு முன் நடைபெற்ற இவ்விவகாரத்தில், தான் பல முறை அவரிடம் அப்படி அழைக்கக்கூடாதென வலியுறுத்தியும் சக பணியாளர் அதைக் கேட்காமல் பணியிட மன துன்புறுத்தல் செயலில் ஈடுபட்டதாக இல்டா தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் மான நஷ்ட வழக்கொன்றை பிரிட்டன் நீதிம்ன்றத்தில்தொடுத்தார். கடந்தாண்டில் நடைபெற்ற அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவில், சக பணியாளர் அவரை அப்படி அழைத்தது ஏற்புடையதல்ல என்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதற்கான அபராதமாக பாதிக்கப்பட்ட இல்டாவுக்கு 1,425.15 பௌண்ட்ஸ் (ரூபாய் மதிப்பில் ரூ. 1.75 லட்சத்துக்கும் மேல்) வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பிரிட்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இப்போது அந்தத் தீர்ப்பை உறுதிசெய்துள்ளது பிரிட்டன் நீதிமன்றம்.
Summary
An Indian-origin healthcare assistant employed with the UK's National Health Service (NHS) has won a harassment claim over being called "auntie" by a nurse colleague of Ghanaian heritage.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீலத்திலிருந்து ‘காவி’ நிறத்துக்கு மாறிய இந்திய ஹாக்கி ஜெர்ஸி!

‘பாகிஸ்தான் காஷ்மீர்’ எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகத்துக்கு இந்திய தூதரகம் கண்டனம்!

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



