கோவில்களைப் புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி ரூ. 44 லட்சம் மோசடி செய்த பாஜகவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.44 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத்தை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, சபி நகர், 3 ஆவது தெரு சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத் (33). இவர் இளைய பாரதம் என்ற பெயரில் யூடியூப் சமூக வலைத்தளம் நடத்தி வருகிறார். இவர் மிலாப் ஃபண்ட் ரைசேர் சைட் என்ற தளம் மூலமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து ரூ. 44 லட்சம் நிதி திரட்டியுள்ளார். இதற்கு அவர் இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை.
மேலும், கார்த்திக் கோபிநாத் அந்தப் பணத்தை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக இருக்கும் தா.அரவிந்தன் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை காவலர்கள் கார்த்திக் கோபிநாத்தை திங்கள்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் மருத்துவமனையில் மாணவா் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

மத்திய உள்கட்டமைப்புத் திட்டங்கள்: அரசுக்கு ரூ. 4.92 லட்சம் கோடி கூடுதல் செலவினம்

உ.பி.யில் 7-ஆவது மாடியில் இருந்து விழுந்து முன்னாள் அமைச்சா் உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என உறவினா்கள் புகாா்

இன்றைய ராசி பலன்கள் (29.7.2026) 12 ராசிகளுக்கும்! மேஷ ராசிக்கு!!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


