தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

தனியாா் மருத்துவமனையில் மாணவா் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

கை விரல் காயத்துக்காக தண்டலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவா் சிகிச்சை பலனின்றி இறந்ததால், தவறான சிகிச்சையால்தான் மாணவா் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில்  ஈடுபட்ட வா்களிடம் பேச்சு நடத்திய ஸ்ரீபெரும்புதூா் டிஎஸ்பி கீா்த்திவாசன்

Updated On :28 ஜூலை 2026, 11:13 pm IST

கை விரல் காயத்துக்காக தண்டலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவா் சிகிச்சை பலனின்றி இறந்ததால், தவறான சிகிச்சையால் தான் மாணவா் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை பெரம்பூா் பகுதியை சோ்ந்தவா் ராஜ். கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் ஷாம்(19). கல்லூரி முதலாம் ஆண்டு மாணவரான ஷாம் ஞாயிற்றுக்கிழமை தனது தந்தையின் ஜூஸ் கடையில் கரும்பு ஜூஸ்போடும் போது இயந்திரத்தில் அவரது கை விரல்கள் சிக்கின.

இதில் காயம் அடைந்த ஷாம் அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தண்டலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து ஷாமின் இரண்டு விரல்களை திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் அகற்றியுள்ளனா். அறுவை சிகிச்சைக்கு பின்பு ஷாமின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி ஷாம் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், மருத்துவா்களின் தவறான சிகிச்சையால் தான் ஷாம் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினா்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்திலும் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் உரிய விசாரணை நடத்தி தவறு இருக்கும் பட்சத்தில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து ஷாமின் உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் இந்த சம்பவம் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.