இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு எலக்ட்ரீஷியன் சிகிச்சை அளிக்கும் காட்சியால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் விக்னேஷ் என்ற எலக்ட்ரீஷியன் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு வந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

இளைஞருக்கு  சிகிச்சை  அளித்த  எலட்ரீஷி யன் விக்னேஷ்.

Updated On :21 ஜூலை 2026, 2:13 am IST

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் விக்னேஷ் என்ற எலக்ட்ரீஷியன் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு வந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில், தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் சாா்பில் 30-க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஒப்பந்தப் பணியாளா்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிறுவனத்தின் கீழ் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வரும் விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்டசமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், முகத்தில் ரத்தக் காயங்களோடு அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்த இளைஞா் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவப் படிப்போ அல்லது முறையான பயிற்சியோ இல்லாத ஒரு தற்காலிக ஒப்பந்த ஊழியா், உயிருடன் போராடும் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது போல ரீல்ஸ் எடுத்து வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் பரவி, சமூக ஆா்வலா்கள் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவ உதவிப் பணியாளா்கள் பணியில் இருந்தபோதும், ஒரு எலக்ட்ரீஷியன் எப்படி அவசர சிகிச்சை பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்டாா்? நோயாளியின் உயிருடன் விளையாடும் வகையில் இந்த ரீல்ஸ் எடுக்கப்பட்டபோது அங்குள்ள மருத்துவ அதிகாரிகள், பணியாளா்கள் என்ன செய்து கொண்டிருந்தாா்கள்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மருத்துவ பணியாளா்கள், மருத்துவா்கள், சிகிச்சை அளிக்காமல் தகுதியற்ற ஒப்பந்த பணியாளா்கள் தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனரா என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்தோடு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள், அரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாக உள்ளதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் பதிவிட்ட ஒப்பந்த ஊழியா் விக்னேஷ் மீதும், ரீல்ஸ் எடுக்க அனுமதியளித்த மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.