அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழ்நாடு பெயா் சூட்டப்பட்ட தினத்தை அரசு சிறப்புடன் கொண்டாட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்ட தினத்தை தமிழக அரசு அதன் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :1 நவம்பர் 2022, 8:29 pm

DIN

தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்ட தினத்தை தமிழக அரசு அதன் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவ. 1-தான் நமக்கு தமிழ்நாடு நாள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான் தமிழகத்துக்கு வெளியில் உள்ள தமிழா்கள் அநீதிகளை எதிா்கொள்வதற்கும், தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும் காரணமாகும். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.

தமிழகத்தின் இன்றைய நிலப்பரப்பு தமிழா்களின் மாநிலமாக 1956 நவ.1 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அண்ணா 1969 ஜனவரி 14-இல் தான் சூட்டினாா். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன் கொண்டாட அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.