வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மு.க.ஸ்டாலினுக்கு இனிப்புகள்; மம்தாவுக்கு புத்தகம்! முதல்வர்களின் பரஸ்பர பரிசு!

இரு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

News image
Updated On :2 நவம்பர் 2022, 2:49 pm

DIN


சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இனிப்புகளை பரிசாக வழங்கினார். இதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு புத்தகங்களை பரிசாக அளித்தார். 

இரண்டு நாள்கள் பயணமாக சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்றார். 

அவரை பூங்கொத்து கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படத்தை வணங்கி மரியாதை செய்தார். 

அதனைத் தொடர்ந்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர் சுமார் அரை மணிநேரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி கலந்துரையாடினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதில் இரு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மம்தா பானர்ஜிக்கு புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். பதிலுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி குடுவையில் கொண்டுவந்த இனிப்புகளைப் பரிசாக வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.