பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்: எ.வ. வேலு

கொளத்தூர், பெரியார் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.


சென்னை: சென்னை பெருநகர பகுதிகளில், வடகிழக்குப் பருவ மழையினால் மழைநீர் தேங்காத வகையில் வடிந்து செல்கிறதா என்பதை ஆய்வு செய்ய, அமைச்சர் எ.வ.வேலு சென்றபோது, கொளத்தூர், பெரியார் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

வடகிழக்குப் பருவ மழையினால், மழைநீர் தேங்காதபடி வடிகால்கள் மூலம் வடிந்து செல்வதை ஆய்வு செய்ய, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, 1.11.2022 அன்று இரவு சுமார் 8.30 மணியளவில், வால்டாக்ஸ் ரோடு, ரெட்டேரி மற்றும் கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை பெருநகர மேயர் ஆர். பிரியா ஆகியோர்கள் உடன் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, இரவு 9.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து, மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்காக, புதியதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களையும், மழைநீர் வடிந்து செல்வதை பார்வையிட்டு, செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்கள். 
அப்போது, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்றப் பேரவையில், இந்த ஆண்டு, கொளத்தூர், பெரியார் நகர், அரசு மருத்துவமனையில், புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்ததின்படி, அரசு ஆணை 3.10.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, கூடுதல் கட்டடத்தில் 220 படுக்கை வசதிகளை கொண்ட, தரை தளம், மூன்று தளங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைப்பதற்காக ரூ.71.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தரை தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, காந்த அதிர்வு அலை மற்றும் ஆய்வகம் சுமார் 16,760 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது என்றும், முதல் தளத்தில், மகப்பேறு பிரிவு, இரத்த வங்கி, அறுவைச் சிகிச்சைக் கூடம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் சுமார் 31,506 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது என்றும், இரண்டாம் தளத்தில், முழு உடல் பரிசோதனை, ஆண் மற்றும் பெண் சிகிச்சை அறைகள், காது, மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் கட்டண அறைகள் சுமார் 31,506 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது என்றும், மூன்றாம் தளத்தில், இதர மருத்துவம் சார்ந்த கட்டடம் சுமார் 31,506 சதுர அடியில் அமைக்கப்படவுள்ளது என்றும், பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

புதியதாக கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடத்தில் மின்தூக்கி வசதிகள் மற்றும் ஜெனரேட்டர் வசதிகள், சிறப்பு மருத்துவ எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தீ தடுப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்புகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இக்கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com