47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாதுகாப்பற்ற கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்: அன்பில் மகேஷ் பேட்டி

பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், கிராமப்புற பள்ளிகளில் தண்ணீர் தேங்குவதை  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும்

News image
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இரண்டு போக்குவரத்து வழித்தடத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Updated On :6 நவம்பர் 2022, 10:15 am

DIN

 
தஞ்சாவூர்: பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், கிராமப்புற பள்ளிகளில் தண்ணீர் தேங்குவதை  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா தெரிவித்தார். 

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு போக்குவரத்து வழித்தடத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, கடந்த காலங்களில் வழங்கிய அறிவுரைகள் போல், தற்போதும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

பள்ளி கட்டடங்களில் எங்கே தண்ணீர் வடிகிறதோ, மேலும், ஊறிப்போன சுவர்கள் என அனைத்தையும் இடித்து விடுங்கள் என கூறியுள்ளோம். 

பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், பள்ளியில் உள்ள சுவிட்ச் போர்டுகளை கண்காணிக்க வேண்டும், பழுதடைந்துள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டு உள்ளோம். கிராமப்புற உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்க  கூடாது என வலியுறுத்தியுள்ளோம். இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.