காரைக்கால்: சந்திர கிரகணத்தையொட்டி கோயில்கள் பல நடை சாத்தப்பட்ட நிலையிலும், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை வழக்கமான வழிபாடு தொடர்ந்து நடைபெற்றது.
கிரகணம் ஏற்படும் நாளில் பல்வேறு கோயில்களில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடை சாத்தப்படும் வழக்கம் இல்லை என்பதால் சந்திர கிரகண நாளான செவ்வாய்க்கிழமை வழக்கமான வழிபாடுகள் நடைபெற்றன.
கிரகணம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 வரை வரை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் வழக்கம்போல காலை 6 முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருநள்ளாறு கோயில் வரலாற்றில் எந்தவொரு கிரகணத்தின் நாள், நேரத்தின்போது நடை சாத்தப்படுவது வழக்கமில்லை. கிரகணம் நிறைவடைந்த பின்னர் கிரகண புண்ணிய காலம் வழக்கமான 6 கால பூஜை அல்லாமல் கூடுதலாக செய்யப்படுகிறது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிரகண நாளில் திருநள்ளாறு கோயில் மூடப்படுவது இல்லை என்ற தகவல் அறிந்த வெளியூரைச் சேர்ந்தோரும், காரைக்கால் பகுதியினரும் வழக்கமான வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!

தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?
என்டிஆர் - நீல் பட வெளியீடு ஓராண்டு தள்ளிப் போகிறது!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


