வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்தாண்டு மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் நாளை கனமழையும், நவ.11, 12 ஆகிய தேதிகளில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட மயிலாடுதுறை, திருவள்ளூர், தஞ்சை, நாகை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கன் பக்கோடா போட்டு வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்!

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!

1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது

அவசரக்கால நடவடிக்கை: 21 மாநிலங்களில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு அனுமதி
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

