தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வடதமிழகம், கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு வரும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2022, 1:36 pm

DIN

வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு வரும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்தாண்டு மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில்  நவம்பர் 11,12 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 12 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்  ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.