
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.மணிகண்டனை, பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதையும் படிக்க- திண்டுக்கல் வந்தார் பிரதமர் மோடி
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத போது காவல்துறை அவரை ஏன் கைது செய்தது என்று தெரியவில்லை. இத்தகைய கைது நடவடிக்கைகள் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும்.
இந்த கைது நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டது மிகுந்த வியப்பையும், வேதனையையும் தருகிறது. எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டுள்ள திரு. மணிகண்டன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.