விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இலவச மின்சாரம் வழங்குவதால் மனம் குளிர்ந்துள்ளது: மு.க. ஸ்டாலின்

மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவதால் என் மனம் குளிர்ந்துள்ளது  என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

News image
இலவச மின்சாரம் வழங்குவதால் மனம் குளிர்ந்துள்ளது: மு.க. ஸ்டாலின்
Updated On :11 நவம்பர் 2022, 11:13 am

DIN


சென்னை: மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவதால் என் மனம் குளிர்ந்துள்ளது. எதையும் சொல்லிவிட்டு செல்பவர்கள் அல்ல, செய்துகாட்டுவதுதான் திமுக அரசு என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தில், கடந்த 15 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை கொடுத்துள்ளோம்.

ஒரு திட்டத்தை சொல்லிவிட்டு போய்விடுபவர்கள் நாங்கள் அல்ல. செய்து காட்டுவதுதான் திமுக அரசு. ஆறே மாதத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மின் உற்பத்தில்யில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 65 367 மெகாவாட்டாக அதிகரிக்கும். தமிழ்நாட்டில் விலைவாசி மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

இலவச மின்சாரத்தால் உணவுபொருள் உற்பத்தி  அதிகரித்துள்ளது. உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிப்பால், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உணவு பொருள்களின் விலை குறைந்துள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தால், ஏழை, எளிய பெண்களின் பொருளாதாரம் வலிமை அடைந்துள்ளது. இதுவே திமுக வழங்கும் பொற்கால ஆட்சியின் அடையாளங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.