வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வேளச்சேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது

சென்னையை அடுத்த வேளச்சேரி சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டது.

News image
வேளச்சேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது
Updated On :12 நவம்பர் 2022, 10:23 am

DIN


சென்னை: சென்னையை அடுத்த வேளச்சேரி சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

சீர்காழியில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 44 செ.மீ. மழை பதிவானது. சென்னையிலும் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

எனினும் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வேளச்சேரி ரயில்வே சுரங்கப் பாதையில் கழுத்தளவு மழை நீர் தேங்கி நிற்பதால் அங்கு போக்குவரத்த முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளைக் கொண்டு, நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.