கோவையில் நைட்டியுடன் திமுக பெண் கவுன்சிலரின் அடாவடி: வைரலாகும் விடியோ!
கோவையில் தொழில் அதிபர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் வைத்திருந்த மரங்களை நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் பிடுங்கி எரிந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவையில் தொழில் அதிபர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் வைத்திருந்த மரங்களை நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் அடாவடியாக பிடுங்கி எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் தொழில் அதிபர் சுபாஷ். இவர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் மரங்களை நட்டு வைத்துள்ளார்.
இந்த மரங்களை சாலையில் வைக்கக் கூடாது எனக்கூறி கோவை மாநகராட்சி 34 ஆவது வார்டு கவுன்சிலர் மற்றும் கல்வி குழு தலைவருமான மாலதி, சுபாஷிடம் தெரிவித்துள்ளார். இதில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுபாஷ் வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த சிறிய மரத்தை மாலதி அடாவடியாக பிடுங்கி எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...