ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து கடந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் மத்திய சிறையில் இருந்து சாந்தன் மற்றும் முருகன் நேற்று விடுதலையாகினர். இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் விடுதலைக்குப் பிறகு திருச்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் மற்றும் முருகன் நளினி உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருந்த முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், விடுதலைக்குப் பிறகு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிக்க: குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் மூச்சுத் திணறி இருவர் பலி
விடுதலையான இருவரும் திருச்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்படும் போது, விடுதலை மகிழ்ச்சி என கை அசைத்து இரு கையையும் சேர்த்து கும்பிட்டபடியே சிரித்துக்கொண்டே இருவரும் சென்றனர்.